கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்கு வயது 98.
இவர் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அச்சுதானந்தன் உடல் நிலை மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






