--- --:--:-- --

தானமாக வழங்கப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள்..!

8

தானமாக வழங்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலம் நான்கு பேர் பார்வை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

உயிருடன் இருக்கும்போது பல்வேறு உதவிகளை செய்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பிற்குப் பிறகு தனது கண்களை தானமாக வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். ராஜ்குமார் இரண்டு கண்களும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.

 

கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கொண்ட நான்கு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. நான்கு பேர் பார்வை பெற்றிருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon