பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்..!
அமெரிக்காவில் மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தில் மருத்துவ குழுவினர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறுநீரகத்தை மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு பொருத்தியதில் அந்த சிறுநீரகம் நன்றாக இயங்குவதாகவும் மனிதனின் தொடையின் மேல் பகுதியில் சிறுநீரகத்தை 3 நாட்கள் வைத்து பரிசோதனை நடைபெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்றும் மருத்துவ வரலாற்றில் இந்த சாதனை மிகப் பெரிய முன்னேற்றமாக கருதப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களுக்கு பொருத்தப்படுத்தப்படும் சிறுநீரகத்தில் எதிர்பார்க்கப்படும் சிறுநீரக அளவை பன்றியின் சிறுநீரகத்திலும் காணமுடிந்தது என்றும் இந்த சாதனையால் மனித உறுப்பு பற்றாக்குறையை போக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






