கொள்ளையனை கண்டுபிடிக்க இன்ஸ்டாகிராம் காதலியிடம் போலீசார் விசாரணை..!
சென்னை ஐசிஎப்இல் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் சிக்காததால் காதலியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அம்பேத்கர் காலனி 6வது தெருவை சேர்ந்த சாலமன் என்பவர் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்ததால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர் சிக்காத நிலையில் அவருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்த புளியந்தோப்பே சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியின் வீட்டிற்கு சென்ற போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மாணவியின் குடும்பத்தினரை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.






