சாக்கடைக் குழியில் விழுந்த தாய் மற்றும் குழந்தை..!
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் சாக்கடை குழியில் விழுந்த பெண் மற்றும் குழந்தையை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். சாக்கடை குழி திறந்திருப்பதால் அதன் அருகே பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த பகுதியில் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த ஒரு பெண் எதிர்பாராத விதமாக சாக்கடைக் குழிக்குள் விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ஒன்று கூடி ஒருவரை உள்ளே இறக்கி அந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு இருக்கின்றனர்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.







