--- --:--:-- --

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படம்..!

4

யன்தாரா. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ஊர் குருவி படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பிக்பாஸ் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கவின். சமீபத்தில் இவர் நடித்து லிப்ட் படம் வெளியாகி கவனத்தை பெற்றது.

 

வெப்சீரிஸ் ஒன்றிலும் அவர் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக நயன்தாரா விக்னேஷ் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ஊர் குருவி படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த படத்தில் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் வெற்றிப் படங்களில் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடமும், விக்னேஷிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய அருண் இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Right Menu Icon