--- --:--:-- --

பள்ளி மாணவனை பிராம்பால் அடித்து தாக்கிய ஆசிரியர்..!

3

டலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் வகுப்பிற்கு வராததால் அவரது ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசு பள்ளியில் பயிலும் மாணவர் வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டி போட வைத்து பிறகு ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார்.

 

இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டி உதைக்கிறார். இந்த காட்சியை படம் பிடித்த மாணவர் ஒருவர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon