விஜயபாஸ்கருக்கு சொந்தமான காளை உயிரிழப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வெள்ளைக் கொம்பன் காளை உயிரிழந்தது. விஜயபாஸ்கர் வளர்ந்து வந்த வெள்ளைக் கொம்பன் காளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்று உள்ளது.
இந்த காளை வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது.






