நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது கோலி அணி..!
பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அபார வெற்றி பெற்று குவாலிபையர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 2020 1 கிரிக்கெட்டில் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதினர்.
டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






