படத்தின் 80 சதவீத கதை என் வாழ்வில் நடந்தது – நடிகை சஞ்சிதா ஷெட்டி
விநோதய சித்தம் படத்தின் 80 சதவீத கதை என் வாழ்வில் நடந்தது போல உள்ளது என்று நடிகை சஞ்சிதா ஷெட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள விநோதய சித்தம் திரைப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.
இதில் படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், நடிகை சமுத்திரக்கனி, நடிகை சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பொழுது சஞ்சிதா ஷெட்டி கூறுகையில் இந்த படத்தின் 80 சதவீத கதை தன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் போலவே அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.






