கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை..!
நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரொனா கட்டுப்பாடு அக்டோபர் 31ஆம் தேதி வரை உள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.






