ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று பாஜக நிர்வாகி தோல்வி.!
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம் பாளையம் ஊராட்சி மற்றும் 9வது வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக நிர்வாகி ஒரு ஓட்டும், தேமுதிக நிர்வாகி இரண்டு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.
9வது வார்டில் மொத்தம் உள்ள 1,551 வாக்குகளில் 913 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் திமுக நிர்வாகி 387 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும், அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் பெற்றனர்.
பாஜக நிர்வாகியான கார்த்திக் என்பவர் ஒரு ஓட்டு பெற்றுள்ளார். தேமுதிக நிர்வாகி ரவிக்குமார் என்பவர் 2 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். பாஜக நிர்வாகி கார்த்திக் நான்காவது வார்டை சேர்ந்தவர் என்ற நிலையில் அவர் ஒன்பதாவது வார்டில் போட்டியிட்டதால் அவருடைய குடும்பத்தினர் கூட வாக்களிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.






