500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறி மனைவியை கொன்ற முதியவர்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறி மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த சுடலை முத்தம்மாள் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக ஒரே காம்பவுண்டில் தனித்தனி வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.
முத்தம்மாள் வீட்டுக்கு வந்த சுடலை தனது 500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் கையோடு கொண்டு வந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முற்பட்டபோது அங்கிருந்து உறவினர்கள் ஆத்திரத்தில் அவரை தாக்க முற்பட்டனர்.






