நிலக்கரி, மின்சாரத்துறை அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை..!
நாட்டில் கடுமையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி தற்பொழுது கையிருப்பில் உள்ள நிலக்கரி அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மின்துறை அமைச்சர் ஆர் கே சி மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.






