சிறுபான்மை சமுதாய ஆணுடன் பைக்கில் சென்ற இளம் பெண்ணை வழிமறித்து தகராறு..!
கர்நாடகாவில் சிறுபான்மை சமுதாய ஆணுடன் பைக்கில் சென்ற இளம் பெண்ணிடம் தகராறு செய்த காட்சி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார்.
அவர்களை மறித்த நபர்கள் சிறுபான்மை சமுதாய ஆணுடன் எப்படி பைக்கில் செல்லலாம் என கூறி தகராறு செய்துள்ளனர். பைக்கில் ஏற்றி வந்த இளைஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன் வன்மையாக கண்டித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பைக்கில் அழைத்து சென்ற இளைஞர் செய்வதறியாது நின்றார். அந்த பெண்ணின் தந்தையை வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர். இளைஞரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






