அஜித் பட தயாரிப்பாளருடன் ஹிப்ஹாப் கூட்டணி..!
ஏ ஆர் கே சரவணன் இயக்கவுள்ள ஃபேண்டசி கதையம்சம் கொண்ட படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகதநாணயம்.
அறிமுக இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்கியிருந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அஜீத் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
பேண்டசி கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளது. ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி தற்போது மூன்றாவது முறையாக அந்த நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






