மனம் திறந்த நடிகை ரகுல் பிரீத்சிங்..!
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாக ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழில் புத்தகம், என்னமோ ஏதோ, தீரன்அதிகாரம்ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 5 இந்தி படங்களிலும் நடிக்கிறார். அண்மையில் படங்கள் குறித்து பேசிய ராகுல் பிரீத் சிங் இவ்வளவு நாட்களாக படம் நடித்து விட்டு இப்போதும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்காமல் இருந்தால் சரி இல்லை எனவும் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு கனவு கதாபாத்திரம் இல்லை எனவும் ஆனால் ஒரு படம் நடித்தால் வாழ்நாள் முழுவதும் ரசிகர்கள் மனதில் பசுமையாக நிலைத்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், பாகுபலி மாதிரி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.






