பேருந்தில் படி மற்றும் ஜன்னலில் நின்று பயணிக்கும் மாணவர்கள்..!
திருவண்ணாமலையில் அரசு பேருந்து வசதி முறையாக இல்லாததால் கிடைக்கும் பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஜன்னல் வழியாக ஏறி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
ஆரணி அருகே உள்ள அகரம் கிராமத்தில் உள்ள தனியார் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் தற்போது நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முறையான பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் பேருந்தில் படி மற்றும் ஜன்னல் வழியாக ஏறி நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






