நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற எல்.முருகன்..!
மாநிலங்களவை உறுப்பினர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த எல் முருகனுக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பணியின்போது மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த எல் முருகன் அவருக்கு நினைவுப் பரிசாக திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.






