--- --:--:-- --

தமிழ்நாடு முழுவதும் இன்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்..!

2

மிழ்நாடு முழுவதும் இன்று 20 ஆயிரம் மையங்களில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

 

அதன்படி கடந்த 12-ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் 7 லட்சம் தடுப்பூசிகளும், 19ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம்கட்ட முகாமில் சுமார் 17 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் மையங்களில் இன்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

 

இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 41 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon