சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.!
Vijay at Puli Audio Launch
பீஸ்ட் திரைப்படத்தின் டெல்லி படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கின்றார்.
திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் இடையே சண்டை காட்சிக்காக படக்குழுவினர் கடந்த வாரம் டெல்லி சென்றனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்பொழுதுடெல்லியில் படப்பிடிப்பு நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.






