--- --:--:-- --

கேக் வெட்டும்போது நடிகையின் முடியில் பற்றிய தீ..!

1

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்ட மெழுகுவர்த்தியை ஊதிய அமெரிக்க நடிகையின் முடியில் தீப்பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க தொலைக்காட்சியில் வடிவமைப்பாளராக உள்ளவர் நடிகை நிக்கோல்.

 

இவர் தனது நாற்பதாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். அதில் நிக்கோல் கேக் வெட்ட மெழுகுவர்த்தியை ஊதியுள்ளார் அப்போது அதில் ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அவரது நீளமான முடியில் முன்பக்கம் பற்றிக்கொண்டது.

 

உடனடியாக அந்த தீயணைக்கப்பட்டு பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறப்பம்சமாக வெளியிட்டு அதில் 40வது பிறந்தநாள் தீயுடன் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon