கணவரை பிரிகிறாரா நடிகை சமந்தா?
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் சமந்தா. தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை எட்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய உள்ளதாக கூறப்படுகிறது.
நாக சைதன்யா நான்கு மாதங்களாகவே தனியாக வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா 50 கோடி ரூபாய் வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது.






