--- --:--:-- --

இரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் காயம்..!

11

பெங்களூர் அருகே இரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர். அத்திப்பேலி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் திலக் இரசாயன ஆலையில் பிற்பகலில் திடீரென வெடித்து சிதறியது.

 

ஆலை ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon