வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்பொழுது படம் எப்பொழுது வெளியிடப்படும் என கேள்வி எழுந்து வந்தது. ஏனெனில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படமும் தீபாவளிக்கு வெளிவருகிறது.
எனவே வலிமை படம் தீபாவளிக்கு மோதும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில் வலிமை திரைப்படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.






