திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மகள் கொலை…!
தஞ்சாவூரில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருப்பதாக அடித்துக் கொன்று ஆற்றில் வீசிப்பட்டிருந்த 7 வயது சிறுமியின் உடல் கல்லணை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. விஜயலட்சுமி என்பவர் 7 வயது மகள் மற்றும் நான்கு வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
விஜயலட்சுமிக்கு உறவினர் வெற்றிவேல் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சை கல்லணை கால்வாயில் 20 கண் பாலம் பகுதியில் கரை ஒதுங்கிய சிறுமியின் சடலத்தை தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர். ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த சிறுமி விஜயலட்சுமி மகள் என்பது தெரிய வந்த நிலையில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விஜயலட்சுமியையும் வெற்றிவேலையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணை தங்காத பழக்கத்திற்கு இடையூறாக இருந்ததால் சிறுமியை அடித்துக்கொன்று கல்லணை கால்வாயில் வீசியதாக வெற்றிவேல் கூறியுள்ளார்.






