1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை..!
தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து வரும் எட்டாம் நாள் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் டாக்டர் ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.
மாணவர்களின் வருகை பதிவேடு மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார். இந்த சூழலில் அவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து என்ன முடிவு எடுக்கலாம் என்பது பின்பு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.






