தமிழ்நாட்டில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு..!
தமிழ்நாட்டில் இன்று முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவையும் இன்று முதல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி திறக்கப்படுகின்றன.
அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாரத்திற்கு ஆறு நாட்களுக்கு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
50 சதவீத மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கப்பட உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. களம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட உள்ளன.
போது இடைவெளியுடன் மாணவர்கள் அமர்வதற்கும் கல்வி நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் நோய் தொற்று பரவி வருவதால் அங்கிருந்து கல்வி பயில மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.






