சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு..! இன்று முதல் அமல்..!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்து தமிழகத்தில் 900 ரூபாயை தாண்டி இருக்கிறது. தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,831.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 285 ரூபாய் உயர்ந்துள்ளது. வீட்டு சமையல் எரிவாயுக்கான சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்து 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.






