--- --:--:-- --

பெண் மற்றும் சிறுமியிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி ஆந்திராவில் கைது..!

12

போக்சோ வழக்கில் சிக்கியதால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை கொடுங்கையூரில் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஜக வழக்கறிஞர் பிரிவு பெரம்பூர் மேற்கு மண்டல தலைவர் பார்த்தசாரதி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதியும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

மேலும் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி பார்த்தசாரதியை கட்சியிலிருந்து நீக்கியதாக பாஜக அறிக்கை வெளியிட்டது.

 

அதேநேரம் தலைமறைவாக இருந்தவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் ஆந்திராவில் பதுங்கி இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon