நெடுஞ்சாலையில் அவசரமாக தரை இறங்கிய விமானம்..!
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவில் சாண்டியாகோ நகரில் நெடுஞ்சாலை ஒன்றில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. இந்த விமானத்தின் இருக்கையில் பாகங்கள் காணாமல் போனதால் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
இந்த காட்சியை வீடியோ எடுத்தவர் தான் காரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது தமக்கு முன்னால் விமானம் தரையிறங்கியது கண்டு வியந்து போனதாக தெரிவித்துள்ளார்.






