--- --:--:-- --

அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு..!

13

ப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.

 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் ஒன்று சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். அமெரிக்க விமானம் புறப்பட்ட சமயத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் விமானத்தை சுற்றி வளைத்த வெளியேற்ற முயற்சித்தனர்.

 

பலர் டயர் பகுதியில் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்திருந்த சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்தனர்.

 

ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon