--- --:--:-- --

உடல் உறுப்புகள் செயலிழந்த மனைவியை 15 ஆண்டுகளாக பராமரித்து வரும் கணவர்..!

7

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உடல் உறுப்புகள் செயலிழந்த மனைவியை 15 ஆண்டுகளாக பராமரித்து வரும் கணவருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த மாதாந்திர பராமரிப்பு தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

 

மதுரையைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணுக்கு கழுத்துக்கு கீழ் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக அவரது கணவர் நெப்போலியன் அவரை பராமரித்து வருகிறார்.

 

இவரது பரிதாப நிலை குறித்து செய்திகள் வெளியான நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதாந்திர உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாய்க்கான ஆணை வழங்கப்பட்டது.

 

அரக்கோணம் தொண்டு நிறுவனம் சார்பில் தண்ணீர் மெத்தை மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. விரைவில் பசுமை வீடு கட்டித்தரப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon