முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்..!
75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றுகிறார்.
அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கி கவுரவிக்க இருக்கிறார். சுதந்திர தின விழாவின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா முடியும் வரை கோட்டையை சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






