பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் குறைப்பு..!
கொரொனா பெருந்தொற்று சூழல் கருதி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாடங்கள் குறைப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
3, 4 ஆம் வகுப்புகளுக்கு 49% பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஐந்தாம் வகுப்புக்கு 48 சதவீதமும், ஆறாம் வகுப்புக்கு நாற்பத்தி ஏழு சதவீதமும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 7, 8ஆம் வகுப்புகளுக்கு 46 சதவீதமும், ஒன்பதாம் வகுப்புக்கு முப்பத்தி எட்டு சதவீதமும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைக்கப்படுகிறது. 11, 12ம் வகுப்புகளுக்கு 35 முதல் 40 சதவீத பாடங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் மாணவர்களுக்கு 50 நாட்களுக்கு ஏற்கனவே ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் நடத்திய பாடங்களை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த வேண்டும் எனவும் குறைக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







