மதுரை ஆதீனம் உடலுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி..!
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 8ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 77வது வயதில் காலமானார். சீர்காழியை சேர்ந்த அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தர்மயாதினத்தில் பயிற்சி பெற்றார்.
மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகா சன்னிதானமாக அருணகிரிநாதர் சுவாமிகள் இருந்து வந்த நிலையில் அவருக்கு 1975 ஆம் ஆண்டு அதற்கான பட்டம் சூட்டப்பட்டது. கடந்த 1980 ஆம் ஆண்டு அவர் பதவி ஏற்றுக் கொண்டார். மதுரை ஆதினத்தின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மதுரை ஆதீன மடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதினம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மதுரை ஆதினத்தின் உடல் நான்கு மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.







