--- --:--:-- --

பி‌எம் தோனி, சி‌எம் விஜய் என போஸ்டர் ஒட்டியுள்ள ரசிகர்கள்..!

7

தோனி, விஜய் ஆகியோரின் புகைப்படங்களை வைத்து ஆளப்போகும் மன்னர்கள் என்ற பெயரில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகே ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

 

அந்த விளம்பர படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி நடித்துள்ளார். இரண்டு படப்பிடிப்புகளும் அருகருகே நடைபெற்றதால் பீஸ்ட் படத்தின் தளத்திற்கு சென்று தோனி நடிகர் விஜய்யை சந்தித்தார்.

 

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தோனி விஜய் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திற்குள் மதுரை வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி ரசிகர்கள் ஒட்டியுள்ள அதிரடி போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

அதில் தோனி படத்தின் அருகே பி‌எம் எனவும், விஜய் படத்தின் அருகில் சிஎம் என்றும் ஆளப்போகும் மன்னர் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon