சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு..!
கொரொனா அச்சத்தின் காரணமாக சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
கொரொனா தொற்றை தடுக்கும் வகையில் மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அரசு கூறியுள்ளது.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் மாணவர்கள் மூத்த குடிமக்கள் விழாவினை காண்பதற்கு நேரில் வருவதை தவிர்க்குமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.







