ஹெலிகாப்டர் ஒன்று ஏரியில் விழுந்து நொறுங்கி விபத்து..!
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஒன்று ஏரியில் விழுந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியுள்ளது. ரஷ்யாவில் ஹெலிகாப்டரில் 3 விமான குழுவினர் உட்பட 16 பயணிகள் பயணம் செய்தனர். ஏரி அருகே சென்றபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இது தொடர்பாக விரைந்து சென்று மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், மற்றும் 8 பேர் நிலைமை என்ன என்று தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.







