132 நாடுகளுக்கு பரவியிருக்கும் டெல்டா வகை கொரொனா வைரஸ்..!
கொரொனா டெல்டா வைரசாக வடிவம் மாறி சுமார் 132 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 30 சதவீதம் பாதிப்பு அமெரிக்காவிலும், 25 சதவீத பாதிப்பு மேற்கு பசிபிக் நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிட்டால் இது 21 சதவீதம் அதிகம். கடந்த 7 நாட்களில் அமெரிக்காவில் சுமார் 5 லட்சம் பேருக்கு புதிதாக பாதிப்பு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரேசிலில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும், இந்தோனேசியாவில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கும், பிரிட்டனில் 2 லட்சத்து 752 ஆயிரம் பேருக்கும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரு வாரத்தில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.







