டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதில் வெளியான புதிய தகவல்..!
கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கின் அடையாள அட்டையை பார்த்த பின்னர் கொடூரமாக துப்பாக்கியால் பலமுறை சுட்டு படுகொலை செய்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முன்பு வெளியான தகவலின்படி இரு தரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அவர் செய்தி சேகரித்த போது சுடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ராணுவத்தினருடன் சென்றுகொண்டிருந்தபோது தாலிபன்கள் தாக்கியதில் காயமடைந்த டேனிஷ் சித்திக் அங்குள்ள மசூதியில் தஞ்சம் அடைந்தார்.
அவர் அங்கு இருப்பதை அறிந்த தாலிபன்கள் மசூதி மீது தாக்குதல் தொடுத்தது. டேனிஷ் சித்திக்கை கொடூரமான முறைகளில் துன்புறுத்தி சுட்டுக் கொன்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அவரை காப்பாற்ற முயன்ற ஆப்கான் தளபதி அணியினரும் தாலிபான்களால் கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





