சிபிஎஸ்சி பிளஸ் 2 முடிவுகள் – மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி
சிபிஎஸ்சி பிளஸ் 2 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவில் மாணவர்களை விட மாணவிகள் 0.54 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் 99.37 சதவீதமாக உள்ள நிலையில் மாணவர்களை விட மாணவிகள் 0.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 152 மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
65 ஆயிரம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாற்று தேர்ச்சி முறை மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.






