--- --:--:-- --

16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்ற மூன்று இளைஞர்கள்

2

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மரக்காணம் அருகே 16 வயது சிறுமியும் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வந்த 18 வயது இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன் இரண்டு நண்பர்கள் மூலம் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனிடையே திருவண்ணாமலையே சென்ற அவர்களைப் பார்த்து உறவினர் ஒருவர் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார் .

 

இதையடுத்து திருவண்ணாமலை சென்ற பெற்றோர்கள் அவர்களை பேருந்து நிலையத்திலேயே மடக்கிப் பிடித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon