லேப்டாப்புடன் வந்து மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..!
மகாராஷ்டிர மாநிலத்தில் மணமேடைக்கு லேப்டாப்புடன் வந்து மணமகளுக்கு தாலி கட்டிய பொதுமக்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரொனா ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவன பணியாளர்களும் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தனர்.
அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற தொடங்கினர். ஆனால் தன் திருமணத்தின் போது மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன் ஒருவர் பணியாற்ற தொடங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உறவினர்கள் பலர் சூழ்ந்திருக்க மணமகனோ சேரில் அமர்ந்து மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு பணியில் மும்முரமாக இருக்கிறார். மணமகன் மணமேடையில் தன் வேலைகளை செய்து முடித்த பின்னரே புரோகிதர் மந்திரங்களை சொல்லத் துவங்குகிறார்.
இன்னும் சில நிமிடங்களில் தன் கணவனாக போகும் மணமகனின் பணி ஈடுபாட்டையும் அக்கறையையும் பார்த்து மணமகள் பெருமிதம் பொங்க புன்னகைத்தபடி இருக்கிறார்.






