இடப் பிரச்சினை காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறல்..!
தஞ்சை அருகே இடப் பிரச்சினை காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீடு புகுந்து பெண்ணை தாக்கி தாலிச் செயினை பறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் இடையாத்தி மந்திக்கூண் கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா என்பவர் சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் என்பவருக்கு ஐந்து சென்ட் இடத்தை விற்றதாக தெரிகிறது.
பாரதிராஜா விற்ற இடத்தில் பாதை இருப்பதால் அதையும் தனக்கு தர வேண்டும் என்று பாரதிராஜாவிடம் உதவி கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் அவரை முத்துவேல் தாக்கியுள்ளார்.
பின்னர் பாரதிராஜா மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்த முத்துவேல் பாரதி ராஜாவையும் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கச் சென்ற பாரதிராஜாவின் தந்தை மற்றும் தம்பியையும் முத்துவேல் மற்றும் அவரது ஆட்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.






