உணவகத்திற்குள் புகுந்த சாரை பாம்பு.!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு உணவகத்திற்குள் புகுந்த சாரை பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. நெடுங்குளம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
இதனை கண்ட வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடிய நிலையில் கடை உரிமையாளர் பாம்பு பிடிப்பவரான முகேஷுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற முகேஷ் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளார்.
இந்த நிலையில் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விடுவிக்கப்பட்டது.






