--- --:--:-- --

குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம்..!

8

குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்றார்.

 

அப்போது பேசிய அவர் டெல்லியில் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு செலுத்தும் வகையில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் குறித்து சோதனைகள் நடந்து வருவதாகவும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப பல பிரிவுகளாக பிரித்து சோதனை நடத்தப்படுகிறது எனவும் கூறினார்.

 

வயதின் அடிப்படையில் குழந்தைகள் பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் இரண்டாவது போஸ் கொடுத்த பிறகு ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்படும். அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை தெளிவுபடுத்தும் எனவும் தெரிவித்தார்.

 

இந்த தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon