--- --:--:-- --

குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு..!

5

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை அளித்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

திருவாலங்காடு அடுத்த சிகிராமத்தை சேர்ந்தவன் கடந்த 22ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 

அடுத்த மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகவிருந்த நிலையில் மணிமாலா இன்று செவிலியர் டாக்ஸிங் என்று அலர்ஜி ஊசி போட்டதில் திடீரென சுயநினைவை இழந்து மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

 

நடவடிக்கை கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் புகார் அளித்தனர். திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அரசு செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon