--- --:--:-- --

கண்மூடித்தனமாக காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர்..!

8

சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடி பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

 

இந்த விபத்தை அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூர்யாவிடம் உடனே தனிப்படை அமைத்தார். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

இதில் பெரம்பலூரை சேர்ந்தவர் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தெரியவந்துள்ளது. பின் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon