அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர்நிலைகள் அமைக்கப்படும்..!
அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர்நிலைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் நீர்வள ஆதாரத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலக வங்கி நிதி உதவி செயல்படுத்தப்படும். நதிநீர் இணைப்புத் திட்டங்கள், புதிய அணைகள் கட்டும் பணி ஆகியவை துரிதமாக மேற்கொள்ளப்படும். புதிய நீர்நிலைகளையும் அணை கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.






